நாளை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு கோரிக்கை
நாளை சனிக்கிழமை காலை வேளையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தேர்தல்கள் செயலகம் வாக்காளர்களிம் கோரிக்கை விடுத்துள்ளது. அடையாளத்தை உறுதிசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், பிக்குகளுக்கான அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை ஆகியவற்றை அடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணங்களாக சமர்ப்பிக்க முடியும்.
இதுதவிர தேர்தல்கள் செயலகத்தினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையும் வாக்களிப்பதற்காக பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.காலை 7 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம் பெறவுள்ளது.
0 comments :
Post a Comment