ரணிலும் டலசும் வீரகேசரிக்கு அள்ளி வீசியவை.
கொழும்பு வெற்றியில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை –ரணில்
வரலாற்றில் முதல்தடவையாக கொழும்பில் ஐ.தே.க வுக்கு பாரிய போட்டி. டலஸ் அழகப்பெரும.
கொழும்பு மநகர சபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை எந்தவித அச்சுறுத்தலும் எடுபடாது வீடுகளை உடைப்பதற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கினர் வாக்குகளை கொள்ளையடிக்க வந்தால் வீதியில் இறங்கமாட்டார்களா? என்று கொழும்பு மாநகர சபை தேர்தல் தெடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்கிரம சிங்க குறிப்பிட்டுள்ளார் தேசிய நாளிதலான வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்கட்டுள்ளன இதுதொடர்பில் நாம் ஆராய்ந்து செயல்பட வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைத்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு அரசாங்கம் இந்த வருடத்தி;ற்குள் தீர்வு காண வேண்டியுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருலாளரும் 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தே;hதலில் 21 அல்லது 22 சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றும் அதே போன்று வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய போட்டி ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும வீரகேசரி நாளிதலுகு;கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கடந்த காலம்களில் கொழும்பில் குண்டுவெடிக்கும் பயமே காணப்பட்டது. மக்கள் வீதிகளில் செல்லவும் பஸ்களில் செல்லவும் அச்சப்பட்டனர் அந்த நிலைமையை மாற்றி சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தது எமது அரசாங்கம்தான். எனவே கொழும்பு மாநகர சபை தேர்தலில் நாங்கள் வெற்றியீட்டுவோம் என்றார்.
அந்தப் பேட்டியில் ஜெனீவா நிலமைகள் குறித்து அடைச்சர் கருத்து தெரிவிக்கையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரின்போது எமக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சில தரப்பினர் முயற்ச்சித்தனர்.
ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை மாறாக ஐக்கியநாடுகள் சபையின் பொதுசபை அமர்வின்போது எமது நாட்டுக்கு பாரிய ஆதரவு கிடைத்தது என்றார்.
தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை பற்றி குறிப்பிடுகையில் தமிழ் தேசிய கூட்டடைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் உள்ளது எக்காரணத்தை கொண்டும் கூட்டமைப்பினரை ஏமாற்றும் எண்ணம் எமக்கு இல்லை அரசியல் தீர்வுதிட்டம் என்பது சாத்தியமான விடயமாகும்.
அதுதொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment