தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருத்திரகுமாரனை சந்திக்காதாம்.
புலிகளின் ஆலோசகராகவிருந்து தற்போது நாடுகடந்த தமிழீழம் எனும் மாயை காட்டிக்கொண்டு நிற்கின்ற ருத்திரகுமாரன் விசுவநாதனைச் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திக்க மாட்டாது என அக்குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா செல்லும் வழியில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களை சந்திக்கவும் அமெரிக்காவில் பல முக்கியஸ்தர்களை சந்திக்கவும் ஏற்பாடகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
2 comments :
திருந்தி விட்டார்கள் போல் தெரிகிறது. நல்ல விடயம்.
இவ்வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் செல்லவுள்ளனர். இக்குழுவில் சம்பந்தன், மாவை, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்தின் ஆகியோர் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லவுள்ள இவர்கள் கனடா சென்று அங்கு மக்களை சந்திக்கவும், அங்கு நிகழவுள்ள கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஏற்றபாடாகியுள்ளது. அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 231 மில்னர் வீதி SCARBOROUGHவில் அமைந்திருக்கும் பீட்டர் அண்ட் போல் மண்டபத்தில் கனடாவில் உள்ள தமது ஆதரவாளர்களை இரவு உணவுடன் கூடி சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. இவர்களை சந்திக்க விரும்புபவர்கள் கேள்விகள் கேட்க விரும்புவர்கள் ஆலோசனை கூற விரும்புபவர்கள், பண அன்பளிப்பு வழங்க விரும்புவர்கள் போன்ற அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள். இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கான கனடிய வீசா மறுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள கனடியத்தூதரம் இவருக்கான வீசாவினை மறுத்துள்ளது. இலங்கையின் ராஜதந்திர கடவுச் சீட்டினை கொண்டுள்ள இவரின் வீசா மறுக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பலதரப்பட்ட சந்தேகங்களை வெளியிடுகின்றனர். அமெரிக்கா செல்லும் இவர் கனடாவில் உள்ள தனது மனைவி பிள்ளைகளை சந்திக்கும் நோக்கில் இவ்வீசாவிற்கான விண்ணப்பத்தினை சமர்பித்திருந்தபோதும் வீசா மறுக்கப்பட்டதன் பின்னணி இவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இந்திய இராணும் இலங்கையில் குடிகொண்டிருந்த காலகட்டத்தில் இவர் மண்டையன் குழு எனும் கொலைக்கும்பலை இயக்கியதுடன் இந்திய ஆக்கிமிப்பு படையுடன் இணைந்து தமிழ் இளைஞர்களை படுகொலைசெய்ததோடு தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகளை வேட்டையாடி அவர்களின் தலைகளை வெட்டி தண்டவாளங்ககளின் மீது பார்வைக்கு வைத்தது உட்படபல்வேறுபட்ட மனித உரிமைமீறல்களை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருணா பிரித்தானியானுள் களவாக நுழைந்து அங்கு சிறைவாசம் இருந்தபின்னர் அங்குள்ள தனது மனைவி பிள்ளைகளுடன் இணைவதற்கு அனுமதி கோரியிருந்தும் பிரித்தானிய அரசு கருணா மீது எவ்வித கருணையும் காட்டாமல் வெளியேற்றியமைக்கான காரணம் புலிகளியக்கத்தில் அவர் இருந்தபோது மனிதகுலத்தின் மீது அவர் மேற்கொண்ட குற்றச்செயல்களே காரணமாகும். அவ்வாறே சுரேஸ் பிறேமச்சந்திரனும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்பதைத் தமிழ் மக்கள் மறந்திருந்தாலும்? கனடா இதுவரையும் மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment