வடக்கையும் தெற்கையும் வெ வ்வேறாக நோக்க நான் தயாரில்லை என்கிறார் மஹிந்த
யுத்தத்தின் போது சுமார் மூன்று இலட்சம் மக்கள் எமது பக்கத்தில் வந்து சேர்ந்தனர்.அவர்களில் 12 ஆயிரம் பேர்வரையானோருக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். இந்த புனர்வாழ்வு நடவடிக்கையானது பாரிய சவாலாக அமைந்திருந்தது. உலகில் எந்த வொரு நாட்டிலும் இல்லாதவாறு நாம் இந்த புனர்வாழ்வு நடவடிக்கையை மிகத் துரிதமாக மேற்கொண்டிருக்கிறோம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ குறிப்பிட்டார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 1800 முன்னாள் விடுதலைப் புலிஉறுப்பினர்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்றைய தினம் இடம் பெற்ற போதே ஜனாதிபதி மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அங்கு தொடர்ந்து உரையாற்கையில் குறிப்பிட்டதாவது,
தெற்கை ஒரு மாதிரியாகவும் வடக்கை ஒருமாதிரியாகவும் நோக்குவதற்கு நான் தயாரில்லை. நீங்களும் நாமும் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டி எழுப்புவது அவசியமாகும். உங்களுடைய தொழில் வாய்ப்பு தொடர்பில் பின்னணி ஒன்றை ஏற்படுத்தி வருகிறோம். அதனை நாங்கள் பொறுப்புடன் நிறைவேற்றுவோம். சவால்மிக்க இந்த புனர்வாழ்வுத் திட்டத்தை குழப்புவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் ஆனால் அதனை நாங்கள் முறியடித்து இலங்கை உலகின் முன்னுதாரணமான நாடாக எடுத்துக் காட்டியுள்ளோம் என்றார்.
0 comments :
Post a Comment