சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்க்ள தடுத்து வைக்கும் சட்டத் திருத்தம்..
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டத் திருத்தம் அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடுடன் இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றில் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என்றும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விசாரணை செய்வதற்கு இந்தச் சட்டத் திருத்தம் அவசியமானது என்றும் அமைச்சர் மேலும் குறிபிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த போதிலும் சில தீய சக்திகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொலை முயற்சி, கொலை, கொள்ளை, கப்பம், பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல், ஆயுத வன்முறைகள் உள்ளிட்ட 15 வகையான குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யக் கூடிய வகையில் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment