நாவற்துறையில் கட்டிட இடிபாட்டிற்குள் சிசுவின் சடலம். இராணுவத் தளபதி யாழ் விஜயம்.
யாழ்பாணம் நாவற்துறை பிரதேசத்தில் கட்டிட இடிபாட்டுக்குள் இருந்து சிசுவென்றின் சடலமென்றை கண்டெடுத்த பொலிஸார் குறிப்பிட்ட சடலத்தை யாழ்பாணம்; போதனா வைத்தியசாலையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் சிசுவின் தாயை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அதேநேரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயமென்றை மேற்கொண்ட இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய யாழ்ப்பாணதில் பணியாற்றும் படையிருக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் குடாநாட்டில் பணியாற்றும் படையினர் தாம் தங்கியுள்ள தனியார் கட்டடங்களிலிருந்து விரைவில் வெளியேறுவர் என்றும் அரச காணிகளில் முகாம்களை அமைத்துத் தங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment