யாழில் ஆயுதக் குழுகளின் ஆயுதங்களை களையக்கோரும் ஆணைக்குழு.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வி னால் நியமிக்கப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவினர் வடக்கு கிழக்கில் இயங்கி வரும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென அறிவித்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் இயங்கி வரும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழில் ஆயுதக்குழக்கள் எதுவும் இயங்கவில்லை என அரசும், யாழ்பாணத்தை தளமாக கொண்டு அரசியல் செய்துவரும் அமைச்சர் தேவனாந்தாவும் பல தடவைகள் வலியுறுத்தி வரும் நிலை யில் யாழில் ஆயுக்குழுக்களின் ஆயுதங்களை களையுமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அனைத்து முகவர் குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் அனைத்து முகவர் குழு எதிர்வரும் வாரத்தில் அறிக்கை சமர்பிக்கவுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்தேச சமூகத்திற்கு தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது. எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த குழுவாக இருந்தாலும் சரி ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் பலர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள இடைக்கால பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அதன் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு முன்வைத்த இடைக்கால பரிந்துரைகளை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரகளுக்கு விளக்கும் கூட்டங்களின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டங்கள் வெளிவிகார அமைச்சில் இடம்பெற்றன.
நீண்டகாலம் இலங்கையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக துயரங்களை அனுபவித்துள்ள மக்களின் துயரங்களை போக்கி, இலங்கை வாழ் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்தார் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முன்னேற்ற அறிக்கையை மிக விரைவில் வெளியிட எண்ணியுள்ளதாகவும் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment