சுவிஸில் மனைவி , இரு பெறாமக்களை கொலை செய்த தமிழனுக்கு 18 வருடம் சிறை.
சுவிற்சர்லாந்தின் ளுவ. புயடடநச மாநிலத்தில் கடந்த 2005 ஆகஸ்ட மாதம் தனது மனைவி மற்றும் மனைவியின் 12 , 13 வயதுடைய இரு குழந்தைகளை கொலை செய்த 39 வயது நபருக்கு கடந்த வியாழக்கிழமை மாவட்ட நீதிமன்று 18 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
குற்றவாளி தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்துள்ளபோதும் விசாரணை அதிகாரிகள் தமது நுண்ணாய்வுகளுடாக குற்றத்தினை நிருபித்துள்ளனர். குற்றச்சுமத்தப்பட்ட நபர் குழந்தைகளை தாயே கொலைசெய்துவிட்டு தன்மீதும் பெற்றோலினை ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாகவும், தான் தனது மனைவியின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளிலிருந்து குறிப்பிட்ட நபருக்கும் கொலை செய்யப்பட்ட அவரது மனைவிக்குமிடையே தகராறுகள் அதிகரித்திருந்தாகவும் அவர் தனது கணவனை விவாகரத்து செய்ய முற்பட்டிருந்தவேiளியிலேயே இவர் இக்கொலைகளை புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொலையுண்ட தாய் ஆனந்தன் எனும் நபரொருவரை முன்னர் திருமணம் செய்திருந்து அவர் நோய்வாய்பட்டு இறந்துள்ளார். ஆனந்தனுக்கு இரு குழந்தைகள் இருந்துள்ளது. இவ்விரு குழந்தைகளுடனும் தாய் நெல்லியடியைச் சேர்ந்த அசோக்கை திருமணம் செய்துள்ளார். இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்துள்ளது. அவர் அசோக்கினால் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். விவாகரத்து பெறுவது என்ற முடிவுக்கு செல்கின்றார். சிறிது காலத்திற்கு அசோக்கை வீட்டிலிருந்து வெளியேற்றியிருந்துள்ளார்.
ஒரு நாள் திடீரென வீட்டினுள் நுழைந்த அசோக் தனது மனைவியை வீட்டினுள் கட்டிப்போட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளையும் ஒருவர் ஒருவராக அழைத்து கத்தியினால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியையும் வெட்டி விட்டு, மனைவிமீது தான் திட்டமிட்டு கொண்டுவந்திருந்த பெற்றோலினை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். பின்னர் அவரும் தற்கொலை முயற்சி செய்தாரா? அன்றில் பெற்றோல் ஊற்றி நெருப்பு வைக்கப்பட்ட தாய் அவரை பாய்ந்து கட்டிப்பிடித்தாரா? என்பது தெளிவில்லாத ஒன்றாக காணப்படுகின்றது.
2 comments :
தமிழினம் உலகெங்கும் நாறுகிறது!
இவர்கள் விடுதலை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய நெல்லியடி, குஞ்சர்கடையை சேர்ந்தவர்கள். கொலைகள் அவர்களுக்கு சாதாரண விடயம்.
ஆனந்தன் என்பவரே குஞ்சர்கடை சனங்கள் சுவிசுக்கு வரக்காரணமாக இருந்தவர்.
எனினும் மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டியவையே.
அன்று இலைங்கை சிறிமா ஆட்சியில் இருக்கும் காலத்தில், கண்டதுகள், நிண்டதுகள் விமான நிலைய பக்கமே தலைவைத்து படுக்கமுடியாது. காரணம் உலகில் எமது நாட்டின், எமது மக்களின் மரியாதை, கௌரவம் காபாற்றப்பட வேண்டும் என்பதே.
அதன்பின்னர் வந்த அரசாங்கம் எல்லாம் தமிழரை நாடுகடத்திவிட்டால் தலையிடி இல்லை என்று, தமிழ ஆடு, மாடு, நாய், பன்றி என்றாலும் பரவாயில்லை என்று விமானத்தில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டார்கள்.
அதன் விளைவுகளை இன்று ஒட்டுமொத்த தமிழினம், உலகெங்கும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
Post a Comment