கொழும்பில் கைதாகிய லண்டன் புலி நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை.
லண்டனிலிருந்து தீபம், ஐபிசி ஆகிய புலி ஊதுகுழல்களுக்காக பணிபுரிந்துவந்த திருலோகச் சுந்தர் என்பவர் இலங்கை சென்றபோது கொழும்பு விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் விசாரணை செய்யப்பட்டு தற்போது விடுதலையாகியுள்ளார்.
இவரின் கைது தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, கடந்தகாலங்களில் புலிகள் அமைப்புடன் கொண்டிருந்த தொடர்புகள், அவ்வியக்த்திற்கான நிதிசேகரிப்பில் ஈடுபட்டமை, புலிகளியக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்ததுடன், நிரோசன் என்ற புலிப்பெயரை கொண்ட இவர் எந்த அடிப்படையில் தற்போது விடுதலை செய்யபட்டுள்ளார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
புலம்பெயர் தேசங்களில் புலிகளுக்காக வேலைசெய்தவர்கள் நாடுசெல்கின்றபோது கைது செய்யப்படுகின்றமையும் பின்னர் அந்தர் பல்டி அடித்து தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்கின்றமையும் இன்று தொடர்கதையாகி வருகின்றது.
குறிப்பிட்ட நபர் ஜிரிவி யில் பணிபுரிந்து வந்தவர். பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை ஜிரிவி அறிவித்தபோது, பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என மக்களை ஏமாற்றும் நெடியவன் குழுவைச்சார்ந்தவரான இவர் ஜிரிவி நிர்வாதத்தினருடன் முரண்பட்டு வெளியேறியதாக தெரிவருகின்றது.
ஐபிசி வானொலியில் நேயராக கலந்து கொண்டு புலிப்புராணம் பாடிவந்த இவர் பின்பு ஐபிசி யுடன் முரண்பட்டுக்கொண்டு ரிபிசியில் இணைந்து கொண்டார். ரிபிசி ராமராஜனால் ஊடகப்பயிற்சி வழங்கப்பட்டு செய்தி வாசிப்பாளராக மாற்றப்பட்ட இவர் பின்பு ராமராஜனுக்கு கம்பி நீண்டிக்கொண்டு ஈரிபிசி எனும் வானொலியை சேதுவுடன் இணைந்து ஆரம்பித்திருந்தார்.
ஈரிபிசி வானொலி நிகழ்சிகள் ஆரம்பிக்கும்போது பிரபாகரனின் பொன்மொழிகள் கூறியே ஆரம்பிக்கும். இவ்வானொலியில் நேயராக கலந்து கொண்ட சுவிசில் கணவனை விட்ட நேயர் ஒருவரை மடக்கிய இவர் அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி 20000 ஆயிரம் சுவிஸ் பிராங்குகளையும் , நகைகளையும் ஏமாற்றியமைக்காக சுவிசில் அப்பெண்ணின் உறவினர்களால் நையப்புடைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் ரிபிசி வானொலியை சேது குழுவினர் தாக்கியமைக்காக பிரித்தானியாவில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ரிபிசி வானொலியின் சிவாஜினி ராமராஜன், சிவலிங்கம் ஆகியோருக்கு நீதிமன்றுக்கு வெளியே நின்று மிரட்டல் விடுத்தவராகும்.
ஊடகதர்மம் புரியாது சேர்ந்துகொண்ட சகல ஊடகங்களுடனும் முரண்பட்ட வன்முறைப் பிரியனான புலியை கைது செய்த இலங்கை பாதுகாப்பு தரப்பினர் இவனை விடுதலை செய்தமைக்கான காரணம் இவன்மீதான குற்றச்சாட்டுக்களை நிருபிப்பதற்கான சாட்சியங்கள் முன்வராமை என தெரியவருகின்றது.
எனவே மேற்படி வன்செயல் புலி தொடர்பான முறைப்பாடுகளை செய்யவிரும்பும் புலம்பெயர் தமிழர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். இவரது விடுதலை தொடர்பாக இலங்கைநெற் இற்கு தகவல் தந்த அதிகாரி இவர் தொடர்பான சாட்சியங்களுக்காக காத்திருப்பதை உணரமுடிகின்றது.
இதில் நகைப்புக்குரிய விடயம் யாதெனில் இவர் நிபந்தனையின் அடிப்படையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஜேஎஸ்டி எனப்படும் அமைப்பு இவர் விடுதலைசெய்யப்படவேண்டும் என அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றது. வன்முறைப் பிரியனான புலியை மேற்படி அமைப்பு ஊடகவியலாளன் என்ற போர்வை போர்த்தி காப்பாற்ற முற்பட்டதன் பின்னணி என்ன?
இன்று ஜிஎம்ரி நேரப்படி 10:32 மேற்படி அமைபினால் இவரை விடுதலை செய்யுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டபோது, அவர் விடுதலையாகி கொழும்பில் மூன்றாவது திருமணம் செய்யவுள்ள பெண்ணுடன் உல்லாசமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1 comments :
எல்லாவற்றுக்கும் காரணம் பணம். புலிகளின் பெயரில் வெளிநாடுகளில் பிடுங்கின உண்டியல் பணம் அவரிடம் நிறைய உண்டு. பணம் எதையும் செய்யுமல்லவா.
அதற்கும் காலம், நேரம் வரும் ஒரு நாள்.
Post a Comment