Friday, July 31, 2009

சம்பந்தனுக்கோர் அன்பு மடல். பாங்கொக்கில் இருந்து ஜெயக்குமார்

கனம் மதிப்புக்குரிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்களுக்கு,


தாங்கள் கிழக்குமாகாணத்தை பிரதிநிதபபடுத்துவர் என்பதாலும் நானும் கிழக்கு மாகாணத்தில் பிறந்த ஒரு பழைய போராளி என்பதாலும் இந்த சிறுமடலை எழுதிகின்றேன். சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். ...

உங்களைபோல் எனக்கு இந்த அரசியல் சித்த விளையாட்டு எல்லாம் தெரியாது.
ஓ..ம் நமோ நாராயணாயா 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது'
அதனால்தான் இன்றும் அகதி வாழ்க்கை.

தாங்கள் பி.பி.சி தமிழோசைசையில் கொடுத்த செவ்வி கேட்டு எங்கள் செவிப்பாறைகள் எல்லாம் குளிர்ந்தது. காரணம் புலிகள் இன்று இல்லை புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றீர்கள. ஆனாலும் தங்களை நம்ப முடியாது. தங்களின் அரசியல் நாடமாகக்கூட இருக்கலாம். இப்படித்தான் இத்தனை காலா காலங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகின்றீர்கள் இதுவும் இந்த தேர்தலில் வெல்லுவதற்குத்தனா? என்ற ஒரு பயமும் உள்ளது.

புலிகளோ தாங்கள் ஓர் நாடுகடந்த உத்தேச தமிழ் அரசை அமைக்கப் போவதாகவும், புலிகள் பீனிக்ஸ் போல எழும் என்றும் கூறுகின்றார்கள். நீங்களோ புலிகள் இன்று இல்லை புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றீர்கள். சம்பந்தன் நீங்கள் கவுண்டமணி பாணியில் காமடி ஏதும் பண்ண வில்லையே? பாதிக்கப்பட்ட உள்ளம் பதை பதைகின்றது. காரணம் உள்ளது பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழ் மக்களை இன்னும் நிம்மதியாக வாழவிடமாட்டார்களா? பழ.நெடுமாறன் குண்டை போடுகின்றார் உங்கள் உறவுகள் தமிழகத்தின் வல்டி மைனர்கள்'. தங்களின் மதிப்புக்குரிய பாசிசப்புலிகளால் எனது சொந்த நாட்டில் வாழமுடியாமல் இன்னும் ஒரு நாட்டில் வாழ்கின்றேன். நாடு திரும்பலாம் என்ற ஒரு நப்பாசைதான். தங்களை நம்ப முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது.

கடந்த கால உங்கள் அரசியல் வாழ்க்கை. அவர் அவர் இருந்த இடத்தை வைத்துத்தான் மதிப்பு. தமிழ் தேசியத்தலைவர் அமிர்தலிங்கம் அய்யா பாசிசப்புலிகளால் கொலை செய்யப்பட்ட பொழுது தெரிந்தும் தெரியாமல் இருந்தது..

அப்போதய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருடன் இணைந்து தமிழ் மக்களுக்குக்கு தீர்வு திட்டத்தை முன் வைப்பதகாகக்கூறி சந்திரிக்கா அம்மையாருடன் விசுவாசமாக இருப்பதாகக்காட்டி குண்டு துளைக்காத காரைப்பெற்ற பின் பல்டி அடித்தது.

பாசிசக்கொலைக்கு அரசியல் அங்கிகாரம் புலிகள் அழியும் வரையில் பெற்றுக்கொடுத்தது.

வீரகேசரி இணையம் 1.25.2009 11:38:59 ல் 'எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்' என்றும் பல்டி அடித்தது.

புலிகளே ஏக பிரதிநிதிகள் புலிகளுடன் பேசித்தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை தர முடியும் என்று புலிகள் அழிக்கப்படும் வரையில் பறக்காத நாடுகள் எல்லாம் பறந்து பறந்து பார்த்ததும.; புலிகள் முற்றாக இல்லை என்றதும் தங்களின் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசித்தான் ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்று தாங்கள் இன்று கூறுவதும் முற்றிலும் வேடிக்கை.

ஏன் நீங்கள் புலிகள் இருந்த பொழுது பிரபாகரன் எங்களுக்கு முக்கியம் அல்ல என்று கூறவில்லை?
எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம் தேசியக்கூட்டமைப்பு என்றால் என்ன?
இது ஜனநாயகத்தை அவமதிக்கும் கூட்டமைப்புத்தானே?

நான் உண்மையில் படித்தது குறைவு இடித்தது சிவன்கோவில். நீங்கள் சட்டம் படித்தவர் அரசியலில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் புரிந்தவர். நீங்கள் இதன் தலைவர் என்றபடியால். தமிழ் தேசியம் என்றால் எனது கணக்கு இதுதான்.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைத்தவர்கள் புலிகள்.
அவர்கள் பாசிசத்தை மதிப்பவர்கள்.
ஜனநாயகம் அவர்களுக்கு சுத்த ஞான சுனியம்.

அப்படியானால் புலிகள் இல்லாதபோது இந்தத் தமிழ் தேசியகூட்டமைப்பு கலைக்கப்பட்டு நீங்கள் முதலில் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியில் இணைவது சாலச்சிறந்தது என நான் நினைக்கின்றேன்.

புலிகள் இல்லாதபோது ஆண்டவன்தான் உங்களை காப்பாற்ற வேண்டும். புலிகள் இருந்தபொழுதும் புலிகள் இல்லாதபொழுதும் சரி தமிழ் மக்களுக்கு யாரும் ஏக பிரதிநிதிகள் அல்ல.

புலிகளால் பறிக்கப்பட்ட ஜனாயகம் தமிழ் மக்களுக்கு மீண்டும் கிடைக்கவேண்டும்.
அவர்கள் அவர்களின் வாழ்விடங்களில் வாழவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பார்கள். ஜனநாயகவழியில் தமிழ் மக்கள் யாரை தெரிவு செய்கின்றார்களோ அவர்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்.

வயித்துப் பசிக்கு சோறு கேட்கும் மக்களுக்கு தீர்வு ஒன்றும் சோறு தராது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். அதுதான் மக்களின் இன்றைய தேவை.
கடந்தவார பி.பி.சி தமிழோசையில் ஒரு பெரிய அப்படமான பொய்யைக் கூறினீர்கள். மூன்று லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று மக்களை பார்வையிட்டீர்களா? எனக் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு தங்களின் பதில் நியாயம் அற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறுகின்றீர்கள் அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான யாழ்ப்பான மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் பார்த்துவிட்டு அழுது கண்ணீர் வடித்தது எல்லாம் என்ன உங்கள் நாடகத்தில் ஒரங்கமா ?

எஸ்.விநோகாராதலிங்கம், சிவநாதன் கிஷோர் இவர்கள் யார்? இவர்களும் தேசிய கூட்டமைப்புதானே? முகாங்களுக்கு சென்று கண்ணீர் வடிப்பதால் என்ன பலன்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் செய்கின்ற உதவிகளைக்கூட உங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் செய்யமுடிவில்லை. சரி அவர் ஒரு அமைச்சர் செய்கின்றார் என நீங்கள் கூறலாம்.

அப்படியானால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள் சாப்பாட்டு பார்சல் தயார் செய்து கொடுக்கின்றார்கள். உங்காளால் தவிக்கும் உள்ளங்களுக்கு தண்ணீர கூடக்கொடுக்கமுடியவில்லையா?

அதில் வேடிக்கை என்னவென்றால் தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாகப் போராடியதாக் கூறுவது. புலிகளுடன் சேர்ந்து போராடியதின் பலன் மூன்று லட்சம் மக்களை முகாங்களுக்குள் வாட வழிவகுத்ததுதான் உண்மை.
அப்படியானால் புலிகள் அழிக்கப்பட்டால் புலிகளால் அமைக்கப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தைத் தவறான தடத்தில் வழிநடத்தியதில் பங்காளியான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் என்னவேலை?

தமிழர்களுக்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுப்பார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது காரணம் தமிழர்கள் முப்பது வருடங்களாக பட்ட துன்பங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டார்கள். எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் உங்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள் அரசியலை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

நன்றி
அன்புடன் அ.ஜெயக்குமார் (சோதி)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com