புதுக்குடியிருப்பு நகர எல்லைப் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் பிரதான கட்டளை மையமும் ஆயுதக் களஞ்சியமும் படையினர் வசம்.
புதுக்குடியிருப்பின் தெற்கே நகர எல்லைப் பகுதியில் அடர்ந்த வனாந்தரத்தினுள் மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டிருந்த புலிகளின் கட்டளை மையமும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றும் இன்று (மார்ச் 01) காலை படையினர் வசம் வீழ்ந்துள்ளது. விமானப்படையினரின் புலனாய்வுத்தேடுதலுக்குத் தென்படாதவாறும் அவ்வாறு அகப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகினாலும் அதற்கு தாக்கு பிடிக்க கூடிய முறையில் மிகவும் சக்திமிக்கதாக அமைக்கப்பட்டிருந்த மேற்படி கட்டளை மையம் நிலக்கீழ் மூன்று மாடிகளைக் கொண்டுள்ளதுடன் அது சாதாரண மக்களின் குடியிருப்பு பகுதியினுள் அமைக்கப்பட்டிருந்ததும் மிக முக்கியமானதாகும்.
மேற்படி கட்டளை மையத்தினுள் காணப்பட்ட ஆயுதக் களஞ்சியம் இதுவரை காலமும் கைப்பற்றப்பட்ட ஆயுதக்களஞ்சியங்களை விட மிகவும் பெரியதாகும் என தெரியவருன்றது. ஆனால் புலிகள் ஓடும் போது மேற்படி களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்களில் பெரும் பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அவ்வாறு புலிகள் தமது ஆயுதங்களை விட்டு விட்டு ஓடுவதும் தீயிட்டு கொளுத்துவதும் அவர்கள் ஓடும் போது அவர்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல அவகாசம் கிடைத்திருக்குவில்லை என்பதும் அவற்றை கொண்டுசென்று வைத்து பாதுகாக்க போதுமான நிலப்பரப்பு இல்லை என்பதும் நிருபணமாகியுள்ளது.
0 comments :
Post a Comment