யுத்த சூனியப்பிரதேசத்தில் பொதுமக்கள் புலிகளின் ஆயுதங்களை பறித்து சுட்டதில் 3 புலிகள் ஒரு பொதுமகன் பலி.
சிறுவர்களை படையில் சேர்க்கும் பணியில் யுத்த சூனியப் பிரதேசத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அங்குள்ள சில சிறுவர்களை கொண்டு செல்ல முற்பட்டபோது புலிகளுக்கும் சிறுவர்களின் பெற்றோருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. அம்முறுகல் முற்றி புலிகள் பெற்றோரை தாக்குவதை அவதானித்த யுத்த சூனியப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் பலர் சேர்ந்து புலிகளைத் தாக்க தொடங்கியதுடன் அவர்களின் துப்பாக்கிகளைப் பறித்து புலிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி துப்பாக்கிச் பிரயோகத்தில் சிறுவர்களை படையில் சேர்க்க வந்திருந்த மூன்று புலிகளும் கொல்லப்பட்டுள்ளதுடன் துப்பாக்கியை பறிக்கும் சமரின் போது புலிககளின் துப்பாக்கியை பறிக்க முற்பட்ட பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி சம்பவத்தை யுத்த சூனியப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.
புலிகள் தொடர்ந்தும் வன்னியில் உள்ள சிறுவர்களை படையில் பாலாத்காரமாக சேர்த்து வருகின்றார்கள் என்பதும் மக்கள் புலிகளுக்கு எதிராக திருப்பியுள்ளார்கள் என்பதும் மேற்படி சம்பவத்தின் மூலம் நிருபனமாகியுள்ளது.
0 comments :
Post a Comment