Monday, March 10, 2014

ஒருபோதும் மேற்கத்தேயத்தின்பால் தலை சாய்க்க மாட்டேன்! - மகிந்த ராஜபக்ஷ

எக்காரணத்திற்காகவும் மேற்கத்தேயத்திற்கு தலை சாய்க்க மாட்டேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். கம்பஹாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் முடிவு எதுவாயினும் அதற்குத் தான் தலைசாய்ப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும், அரசாங்கம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கின்றதா என்பதை முடிவு செய்ய வேண்டியது பொதுமக்களே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேச நாடுகள் மட்டுமன்றி, இந்நாட்டு எதிர்க்கட்சிகளும் யுத்தத்தினால் தங்களுக்குப் பெற முடியாதவற்றை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் மூலம் பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(கேஎப்)

No comments:

Post a Comment