Monday, March 10, 2014

ஆண்பிள்ளைகள் பலரை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பிரசாரகரைத் தேடி வலைவீச்சு!

குறித்ததொரு மத பீடமொன்றினால், படல்கம கெஹெல்எல்ல பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட பிரார்த்தனை நிலையமொன்றின் பிரசாரகர் ஒருவர், இளம் சிறுவர்கள் சிலரை தனது பாலியல் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்தியுள்ளார்.

அதனால் பெரும் வேதனைக் குள்ளாகியுள்ள அப்பகுதி மக்கள் குறித்த பிரசாரகரை உடனடியாக கைதுசெய்யுமாறு வற்புறுத்துமாறு கூறும் எதிர்ப்புப் பேரணியொன்று கெஹெல்எல்ல முச்சந்தியில் நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையத்தில் நோய்களுக்கு நிவாரணம் அளித்தல், மார்க்கத்தை எடுத்துச் சொல்லுதல், மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல் போன்றன இடம்பெற்றிருந்ததாகவும், தற்போது அது மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பிரசாரகர் அவ்விடத்தினின்றும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெளிவாகியுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment