Monday, March 10, 2014

வெள்ளியன்று சிறை.... திங்களன்று விடுதலையாவதற்கு பாரிய தொகை கொடுக்குமொரு வியாபாரம்!

சின்னஞ்சிறு குற்றங்கள் புரிந்து வெள்ளிக்கிழமையில் சிறையில் இருந்துகொண்டு, சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை நாட்களில் சிறைச்சாலையினுள் போதைவஸ்து கடத்துபவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் திங்கட் கிழமை பிணையில் விடுதலையாகும்போது, அவர்களின் வங்கிக் கணக்குகளில் பாரிய தொகை வைப்பிலிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கைதிகளை சிறையினுள் அடைக்குமுன்னர் அவர்களிடம் முதலில் நடாத்தும் பரிசோதனை இயந்திரங்களில் அகப்படாத வண்ணம் “காபன்“ தாள்களில் சுற்றி குதவழியாக ஒழித்துக் கொள்பவர்களும் சிறையினுள் அடைக்கப்படுவதாக தெரியவந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் சந்திரரத்ன பல்லேகம தெரிவிக்கிறார்.

(கேஎப்)

No comments:

Post a Comment