Friday, February 14, 2014

சர்வதேச சமூகத்தின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: கெஹலிய ரம்புக்வெல்ல!

யுத்த நிறைவடைந்ததன் பின் அரசாங்கம் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியதுடன் சர்வதேச சமூகம் காலத்திற்கு காலம் இலங்கை தொடர்பான கொள்கைகைள மாற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தினார். 

மேலும் சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் இலங்கை விவகாரத்தில் உள்நோக்கம் ஓன்றுடன் செயற்பட்டு வருவகின்றமை புலனாகின்றது எனவும் எது எப்படியிருந்தாலும் அனைத்து நாடுகளினதும் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைக்கான ஆதரவினை அதிகரிக்கும் நோக்கில் ராஜதந்திரிகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment