Friday, February 14, 2014

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழில் ஆரம்பம்!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காணாமல் போனவர்கள் தொடர்பிலான யாழ். மாவட்டத்திற்கான விசாரணைகள் இன்று(14.02.2014)ஆரம்பமாகியதுடன் முதல் நடவடிக்கையாக வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த காணாமல் போனவர்களுக்கான பதிவுகள் கோப்பாய் பிரதேச செயலகத்தில் தொடங்கின.

இதற்கமைய இன்று கோப்பாய் பிரதேச செயலகத்திலும், தொடர்ந்து சாவகச்சேரி பிரதேச செயலகம், பின்னர் நல்லூர் பதிவும் இறுதியாக யாழ். பிரதேசங்களை உள்ளடக்கியதாக யாழ். செயலகத்திலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment