Tuesday, February 11, 2014

சவுதியில் எஜமானர் வீட்டுக்குத் தீ வைத்தார் இலங்கைப் பணிப்பெண்!

சவுதியில் தம்மை பிழையாக நடத்திய தொழில் தருணரின் வீட்டை இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தீவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த தொழில் தருணர் தமக்கு உடன்பட்ட நிதியை சம்பளத்தை வழங்காமல், நீண்ட காலமாக அவரை துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், குறிப்பிட்ட சம்பளத்தை தராவிட்டால் வீட்டினை தீ மூட்டுவ தாக குறித்த பணிப் பெண் பல தடவை வீட்டு உரிமையாளரை எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை வீட்டு உரி மையாளர் வெளியில் சென்ற சமயம் பார்த்து, வீட்டை தீயிட்டு கொழுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment