அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்காக கொழும்பு நகர் நவீனமயப்படுத்தப்படுவது தாமதமாகிவருவதற்கு ஒப்பந்தக்காரர்களும், கொழும்பு மாநகர சபையின் சில செயற்பாடுகளும் காரணமாகவுள்ளது என கொழும்பு நகரபிதா ஏ.எம்.எம். முஸம்மில் குறிப்பிடுகிறார்.
வெகுசீக்கிரம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என ஆரம்பம் தொட்டு ஒப்பந்தக் கம்பனிகளுக்கு அறிவித்த போதும், அந்நிறுவனங்கள் தாமதமாகும் என்பதை நகர சபை தெரிந்திருந்ததாகவும் நகரபிதா குறிப்பிட்டார்.
அத்தோடு, சிற்சில வேளைகளில் நகரசபையின் செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டிவந்ததாகவும், இவ்விடயங்கள் தாமதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் முஸம்மில் தெளிவுறுத்துகிறார். விசேடமாக வாகன நெறிசலை இல்லாமற் செய்யும் பொருட்டு பாதைகளை நவீனமயப்படுத்தும் போது, இவ்வாறான செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டிவருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
உலக வங்கியின் நிதியின் கீழ் செயற்படும் ஒப்பந்தக் கம்பனிகள் ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திட்டுள்ளதுடன், தேவையான முறையில் திட்டத்தை முடிக்காமலிருப்பதால் அவர்கள் கட்டாயம் தண்டப் பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு உள்ளாக்கும் எனவும் நகரபிதா மேலும் தெளிவுறுத்தினார்.
(கேஎப்)

No comments:
Post a Comment