இரண்டு கால்களையுடைய அநாதை யானைகளுக்காக இலங்கையில் சரணாலயங்கள் மூன்று அரசாங்கத்தின் செலவில் அமைக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன குறிப்பிடுகிறார்.
“இலங்கையில் தற்போது ஒரேயொரு யானைகள் சரணாலயம்தான் இருக்கின்றது. அது நான்கு கால்களையுடைய யானைகளுக்காக பின்னவெலவில் அமைந்துள்ளது. இப்போது பார்க்கும்போது இரண்டு கால்களையுடைய யானைகளும் அநாதைகளாகவிருக்கின்றன. அதனால் அந்த யானைகளுக்காக நாங்கள் எங்கள் செலவில் யானைகள் சரணாலயங்கள் மூன்றை அமைக்கவிருக்கின்றோம்.
சஜித்துடன் இருந்து அநாதைகளான யானைகளுக்கு ஹம்பாந்தோட்டையில் ஒன்றும், மாத்தறையில் மங்களவினால் அநாதைகளுக்கான யானைகளுக்காக ஒன்றை மாத்தறையிலும் அமைக்கவிருக்கின்றோம்.
அடுத்த சரணாலயத்தை கொழும்பில்தான் அமைக்க வேண்டும். ஏன் என்றால் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்து அநாதையான யானைகளுக்கும் இருக்க இடம் வேண்டாமா? இல்லாவிட்டால் அது சரியில்லையே? யானைகளைத் துன்புறுத்தக் கூடாது.“ எனவும் அவர் களுத்துறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)

No comments:
Post a Comment