யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் செல்வன் தவபாலசிங்கம் நேற்றைய தினம் யாழ் கந்தர்மடம் பழம் வீதியில் வைத்து இனம்தெரியாத நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டிக்கும் முகமாக இன்றையதினம் யாழ்பல்கலைக்கழக அனைத்து பீடமானவர்களும் விரிவுரைகளை பகிஸ்கரித்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இவ் எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து பீட மாணவர்களும் ஒன்றிணைந்து ஈடுபட்டனர். இவ் எதிர்ப்பு போராட்டம் காலை 10மணி முதல் 11.30 மணிவரை நடைபெற்றது. இப் போராட்டத்தில் மாணவர்கள் சுலோக அட்டைகளினை தாங்கியவாறு ஊர்வலமாக சென்றனர்.


No comments:
Post a Comment