Monday, October 17, 2011

அமெரிக்க நீதிமன்றுக்கு ராஜதந்திரி என்ற சான்றிதளை அனுப்பி வைத்தார் சவேந்திர

இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர பிரதிநிதி சவேந்திர சில்வா தனது இராஜதந்திரி நியமன ப த்திரத்தை அமெரிக்க நீதிமன்றுக்கு அனுப்பி வைத்துள்ளார். புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தளபதி கேணல் ரமேசின் மனைவி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க தென் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது கடந்த செப்டெம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கான அழைப்பாணை சவேந்திர சில்வாவின் தனிப்பட்ட வீட்டில் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திரி அந்தஸ்த்தை உறுதிப்படுத்தும் சான்றிதளை வழங்கியது. இதனையடுத்து ராஜாங்க திணைக்களத்தின் ராஜதந்திர தன்மைக்கான அறிக்கையையும் இணைத்து சவேந்திர சில்வாவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் எதிர் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment