இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு சட்டவிரோதமாக பணம் மற்றும் தங்கம் கடத்த முயன்ற தாயும் மகளும் இன்று அதிகாலை 12 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களிடமிருந்து மேலும் 11 கோடி பெறுமதியான சுமார் 18 கிலோ தங்கமும் மீட்கப்பட்டுள்ளனவிமான நிலைய சுங்கப்பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய் (73 வயது), மகள் (47 வயது) ஆகியோர் அமெரிக்க கடவுச் சீட்டில் செல்லவிருந்ததுள்ளனர், இவர்களிடமிருந்து 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் இந்தியா, தாய்வான், கொரியா, அமெரிக்க நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, ஹொங்கொங்கிலிருந்து ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான ஆயிரத்து 660 கைக்கடிகாரங்களைக் கடத்தி வந்த இளைஞரொருவர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment