Thursday, May 14, 2020

மங்கள சமரவீரவை வரவழைக்கின்றது குற்றப் புலனாய்வுத் திணைக்களம்! ஏன்?

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் குறித்த விடயம் ஒன்று தொடர்பில் கருத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்களை வடக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்ல எஸ்.எல்.டி.பி பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவர் இன்று கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

No comments:

Post a Comment