Thursday, May 14, 2020

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற மங்கள வீடு திரும்பினார்!

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தன்னுடைய கருத்தைத் தெரிவிப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து ஐந்து மணித்தியாலங்கள் அவர் குறித்த திணைக்களத்தில் தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெயர்ந்தவர்கள் தங்களது வாக்குகளை அளிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் நோக்கிச் செல்வதற்காக இ.போ.ச பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதியுதவி வழங்கினார் என்றும் அவர்மீது குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டிருப்பதைத் தொடர்ந்தே அதுதொடர்பில் விசாரிப்பதற்காக மங்கள சமரவீர அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பில் இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனிடமும் இதுதொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை செய்துள்ளது.

No comments:

Post a Comment