Thursday, May 21, 2020

டுபாயிலிருந்து இலங்கை வந்த 15 பேருக்கு கொரோனா தொற்றுச் சந்தேகம்!

21 ஆம் திகதி முற்பகல் 10 மணியிலிருந்து இந்நேரம் வரை கொரோனா தாக்கத்திற்குள்ளான 17 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1045 பேர் பதிவாகியுள்ளனர்.

இனங்காணப்பட்டோரில் இருவர் கடற் படையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 15 பேரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள். அவர்களும் தனிமைப்படுத்தல் நிலையமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளர்.

No comments:

Post a Comment