Sunday, April 26, 2020

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு!

ஓய்வில் சென்றுள்ள முப்படை அதிகாரிகளையும் மீண்டும் சேவைக்கு வரவழைக்கும் பொருட்டு, நாளை 27 ஆம் திகதி திங்கட் கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கைளத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டமானது நாளை மறுதினம் (28) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்குச் சட்டமானது தளர்த்தப்பட்டு, அதே தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் ஊரடங்குச் சட்டமானது அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment