Sunday, April 26, 2020

கொரோனா மரணங்கள் ஏற்படலாம்: சடலங்களை மூடும் 1000 பைகளை பெறுகிறது இலங்கை!

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மரணங்கள் அதிகமாக ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாக சடலங்களை மூடிவைக்கும் சர்வதேச தரம்வாய்ந்த பைகளை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்கின்றது.

இதன்படி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தடயவியல் இணைப்பாளரிடம் 1000 பைகளை கோரி இலங்கை அரசாங்கம் கடிதம் அனுப்பிவைத்திருக்கின்றது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மருத்துவ சேவைக்கான மேலதிக செயலாளர் சுனில் டி அல்விஸின் கையெழுத்துடன் கடந்த 24ஆம் திகதி மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment