Saturday, March 28, 2020

வெளிநாட்டு சென்று திரும்பிய புத்தளம் நபருக்கு கொரோனா

புத்தளம் ஸாலிஹீன் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடு 'ஜமாஅத்'சென்று நாடு திரும்பிய குறித்த நபர் தன்னைத்தானே தனிமைப்படுத்தாது நகரில் சுற்றித் திரிந்துள்ளார். இதனையடுத்து திடீர் சுகயீனமுற்ற நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தெரிவித்துள்ளார். தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்தை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். ஸாலிஹீன் பள்ளிவாசலைச் சூழ இருப்போரும் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர், யார் யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

(தா.ஸ)

No comments:

Post a Comment