கொடிகாமம் சந்திப்பகுதியில் இன்று இரவு, மோட்டார் வண்டி ஒன்றும் ரிப்பர் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் A9 வீதியின் ஊடாக கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், திடீரென கொடிகாமம் கச்சாய் வீதி திருப்பத்தில் குறிக்கிட்ட போது கிளிநொச்சி பகுதியில் இருந்து வந்த ரிப்பர் ரக வாகனத்துடன் மோதி, விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மோட்டார் வாகனம் உட்பட மேலும் ஒரு வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத்தை செலுத்தி சென்றவர் சமயோசிதனமாக செயற்பட்டமையால், அவர் சிறிய அளவிலான காயங்களுக்கு மாத்திரமே இலக்கானார். இந்த நிலையில் விபத்து சம்பவித்தபொழுது அங்கு நின்ற ஒருவர் தனது ஸ்மார்ட் தொலைபேசியால் புகைப்படம் எடுத்திருந்தார். இதனை கண்டித்த பொலிசார், அவரிடமிருந்த கைதொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.
புகைப்படம் எடுத்தவர் பொலிசாரிடம் கைதொலைபேசியை பெற்றுக்கொள்ள முயன்ற போது, பொலிசார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் என்று விபத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment