புலிகளின் கைபொம்மையாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களின் சர்வதேச சூழ்ச்சியாளர்களுக்கு பெற்ற சுதந் திரத்தை தாரை வார்க்க முடியாது என மகா சங்கத்தினர் உட்பட சர்வமத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை கண்டித்து, மகா சங்கத்தினரும் சர்வமத தலைவர்களும் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அநுராதபுரம் பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று, டி.எஸ். சேனாநாயக சுற்றுவட்டம் வரை, இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்த சர்வமத தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வரும் சமயங்களுக் கிடையிலான சகவாழ்வை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment