Thursday, December 19, 2013

ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!

ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா விழுங்கிய சம்பவமொன்று தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இன்று(19.12.2013) வியாழக்கிழமை காலை நடைபெற்று ள்ளது. ஒரே கூட்டில் இருந்த இரண்டு அனகொண்டா களுக்கு இடையில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னரே 10 அடி நீளமான பெண் அனகொண்டா 9 அடி நீளமான ஆண் அனகொண்டாவை விழுங்கியுள்ளது என்றும் மிருக காட்சிசாலையின் சேவையாளர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை இந்தச்சம்பவத்தால் பெண் அனகொண்டாவுக்கும் ஆபத்து ஏதும் ஏற்படக்கூடும் என்றும் சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment