Sunday, February 23, 2014

ஐநா அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

தமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா. வெளி யிட்டுள்ள அறிக்கை கட்டுக்கதை என்றும் அந்த அறிக்கையை நிராகரிப்பதாகவும் வட கொரியா அறிவித்துள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக் கப்படும் புகார்கள் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் கண்டுபிடித்துள்ள கட்டுக்கதை என்றும் அது தாக்கியுள்ளது.

மனித குலத்துக்கு எதிராக ஏராளமான குற்றங்களை இழைத்துள்ளதற்காக வட கொரிய தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐநா திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.

வடகொரிய தலைவர்களும் அதன் அரசாங்க அமைப்புகளும் அதிகாரிகளும் திட்டமிட்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகி றார்கள் என விசாரணைக் கமிஷ னின் அறிக்கை தெரிவிக்கிறது. ஐ.நா. வெளியிட்ட அறிக்கை 400 பக்கங்களை கொண்டது. வட கொரியாவிலிருந்து வெளியேறி

யவர்கள் கொடுத்த சாட்சியங் களை வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

No comments:

Post a Comment