நேற்றிரவு வலபானே, ராகல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின்மீது வானிலிருந்து மர்மப்பொருள் ஒன்று விழுந்ததனால், அவ்வீடு தீப்பற்றியுள்ளது.
பிரதேவாசிகள் அந்நெருப்பை கடும் பிரயத்தனத்துடன் அணைத்துள்ளனர். குறிப்பிட்ட வீட்டுக் கூரையில் 6 அங்குலத்திற்கு சிதைவு ஏற்பட்டுள்ளது.
வான்பொருளுடன் தொடர்புற்ற எந்தவொரு பகுதியும் காண்பதற்கில்லை எனவும், இதுதொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர்
ஆய்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது குறித்த வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
(கேஎப்)

No comments:
Post a Comment