விக்கினேஸ்வரன் முறைப்படி வட மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப் பிமாணம் செய்து கொண்டார் என்றும் அவர்கள் மிகவும் தந்திமான முறையில் செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகின்றது என்றும் தேசிய தேசப்பற்றாளர் இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறயுள்ளார்.அலரி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், நாட்டைப் பிரிக்கும் எண்ணம் களையப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். அவர்கள் இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அமைய நடந்து கொள்கின்றனர் என்பது நன்கு புலனாகின்றது. ஆனால், சிங்கள அரசியல்வாதிகள் அதனைப் புரிந்து கொள்வதில்லை.
இறுதியில், வடக்கு கிழக்குக்கு ஒரு வேறான அதிகாரம் உருவாகும். சிங்களவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று அமரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment