Thursday, October 10, 2013

இந்திய-இலங்கை உறவு வலுவாகவுள்ளது. ஜேவிபியின் கேள்விக்கு அமைச்சர் தினேஸ் பதில்

இலங்கை நிறுவனங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தென்னிந்தியாவில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பற்றி ஜேவிபி எம்பி அனுர குமார திசநாயகா இன்று (09) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தனா இந்தியாவும் இலங்கையும் வலுவான உறவைக்கொண்டுள்ளன. எனினும் தமிழ்நாட்டில் உள்ளவை உள்ளிட்ட சில தீவிரவாத குழுக்கள் இலங்கை, இந்தியாவுக்கிடையிலான உறவைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

இலங்கையர் பயமுறுத்தப்படும்போது இந்தியா தென்னிந்தியா பக்கம் விரலை நீட்ட முடியாது. இந்தியா முழுப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் நாட்டில் இயங்கும் இலங்கை நிறுவனங்களுக்கு இந்தியா அளித்துள்ள பாதுகாப்பு திருப்தியானதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் இந்தியவில் உள்ள இலங்கை நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றி இந்திய அதிகாரிகள் புலனாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் தினேஸ் குணரட்ண குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment