ஒழுக்கத்தை மீறும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பல்கலைக்கழக மாணவர் களின் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை இரத்துச் செய்வதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.மாணவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு பின்னர் குறித்த தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களின் புலமைப் பரிசில்களை ஒழுக்காற்று நடவடிக்கை என்ற போர்வையில் இரத்துச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
No comments:
Post a Comment