Monday, May 14, 2012

சரத் பொன்சேகாவின் வழக்கு ஜுன் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சரத் பொன்சேகாமீது குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சரத் பொன்சேகாவின் உடல் நிலை சீராக இல்லாததால். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment