Saturday, December 24, 2011

ஜே வி பி மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கிளர்ச்சிக் குழு தெரிவிப்பு

ஜனவரி மாதம் முதலாம் திகதி, முறையான செயற்பாடுகளை மீறி ஜே வி பி மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக அதன் கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. அதன் இணைப்பாளர் சமீர கொஸ்வத்த கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

இந்த மாநாடு ஜே வி பியின் சில தலைவர்கள் தங்களின் பலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இது தொடர்பில் கட்சியின் பொது செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிடுகையில்,

ஜே வி பியின் முக்கிய மாநாடு ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் ஹம்பாந்தொட்டை- திஸ்ஸமஹாரமவில் நடைபெறவுள்ளது.இது தொடர்பில் உறுப்பினர்களை தெளிவுப் படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த மாநாட்டில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் புதிய மத்திய செயற்குழுவுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

இதேவேளை, இலங்கை::ஜே.வி.பி. கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜே.வி.பி கிளர்ச்சிக்குழுவில் அங்கம் வகிக்கும் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போதல் சம்பவம் குறித்து ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment