Saturday, December 24, 2011

கூரையால் இறங்கி 40 பவுண் திருடல்! மருதமுனையில் சம்பவம்.

மருதமுனை அல்மனார் வீதியில் உள்ள அல்மனார் அரம்ப பிரிவுக்கு முன்னாள் உள்ள வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்றிரவு 8 மணியளவில் பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளையில் தருணம் பார்த்திருந்து உள்ளே நுழைந்த கோஷ்டி ஒன்று கூரைவழியாக இறங்கி 40 பவுண் தங்க நகையை திருடிச் சென்றுள்ளது.

கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் இனாமுல்லா அவர்களின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment