கடந்த 19 ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்த முன்பாக இடம் பெற்ற கலவரத்தை அடுத்து , கலவரம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய தேசிய கட்சியின் கட்டானை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்துவின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது அமைப்பாளர் பதவியும் பறிபோயுள்ளது. சஜித் பிரேமதாசவின் பிரதான ஆதரவாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்னாந்து அண்மையில் சஜித் அணியினரின் முக்கியஸ்தர்களை வரவழைத்து கட்டானையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment