Friday, December 23, 2011

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

மேல் மாகாண அனைத்துத் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ள பஸ் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு அரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பஸ் சம்மேளனம் ஆகியன பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

இதேவேளை, போக்குவரத்து மார்க்க இலக்கம் 138 ஊடான ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment