ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக சமரசம் செய்து கொண்டு கட்சியின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கு தான் தயாராக இருப்பதாக, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தனவிடமும் மலிக்சமர விக்ரமவிடமும் தெரிவித்துள்ளார். ருவன் விஜேவர்தன ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய உறவினராவார்.அத்துடன் கட்சியின் முக்கியஸ்தரான மலிக் சமர விக்கிரம ரணிலின் நெருங்கிய நண்பராவார்.
கட்சி தேர்தலின் போது தனக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மலிக் சமரவிக்கிரமவுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் , ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமுகமான பேச்சுவார்தையில் ஈடுபடவும் நேரத்தை பெற்று தருமாறு சஜித் பிரேமதாச சமரவிக்கிரவிடம் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment