Saturday, October 15, 2011

தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிப் பிரமாணம் நாளை

அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வில் 21 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ முன்னிலையில் தமது பதவிப்பிரமாணத்தை செய்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இந்த வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த கல்முனை மாநகரசபை மேயர் மற்றும் உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 15 மாநகர சபைகளையும, ஐந்து பிரதேச சபைகளையும் மற்றும் ஒரு நகர சபையையும் கைப்பற்றியது. கல்முனை மாநகர சபையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment