Saturday, October 15, 2011

புதிதாக 13 பதில் பொலிஸ் மா அதிபர்கள் நியமனம்

புதிதாக 13 பதில் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரினால் இந்த நியமனங்கள் இன்று (நேற்று) வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மெக்ஸி புரொக்டர் குறிப்பிட்டுள்ளார். அதன் பிரகாரம் 13 மாவட்டங்களுக்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அரச சேவைகள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகா்கள் 13 பேரின் பெயர்களைப் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக நியமிப்பதற்காக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் கூறினார்.

No comments:

Post a Comment