வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதி முகாமில் உள்ள மாணவர்கள் மற்றும் மத்திய மாகாண மாணவர்களின் கல்வியில் உதவும் பொருட்டு சென்னை பல்கலைக்கழகம் கல்வி நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. திருவாசகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அவர் இந்தியாவிற்கான இலங்கைத் துணைத் தூதுவர் கிருஸ்ணமுர்த்தியுடன் மேற்கொண்டுள்ளதாகவும் அதன் பொருட்டு எதிர்வரும் ஜூலை மாதம் பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். முற்றிலும் இலவசமாக நாடாத்தப்படவிருக்கும் குறிப்பிட்ட கல்வி நிலையங்களுக்கு தேவையான ஆசிரியர்களை அவ்வப் பிரதேசங்களிலேயே இருந்து தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்ப ங்கள் கோரப்படும் எனவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment