Saturday, December 26, 2009

மகனை கட்டிவைத்து அடித்த தந்தை விளக்க மறியலில்.

பத்துவயதுடைய மகனை அடித்து துன்புறுத்திவிட்டு சங்கிலியால் மரத்தில் கட்டிவைத்த தந்தையை கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது , விளக்கமறியலில் வைக்குமாறு நிதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, அவிஸாவளைப் பிரதேசத்தில் மதுபானத்திற்கு அடிமையாகியுள்ள தந்தை தனது குழந்தைகளை அடித்து துன்புறத்துவது வழமையாக இருந்து வந்துள்ளது. இவரது மனைவி ஓர் கூலித் தொழிலாளியாவார், குறிப்பிட்ட தினம் தாய் தொழிலுக்கு சென்றிருந்தபோது , இவர் குழந்தையை அடித்து மேற்கூறியவாறு கட்டிவைத்துள்ளார். ஒருவாறு சங்கிலியை கழற்றிக்கொண்டு அண்மையில் உள்ள பௌத்த கோவில் ஒன்றுக்கு ஓடிய சிறுவன் தனக்கு நேர்ந்த கதியை அங்கிருந்த பிக்குவிடம் தெரிவித்துள்ளார். பிக்கு பொலிஸாரை தொடர்புகொண்டு சம்பவத்தை விளக்கியபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment