Saturday, June 13, 2020

கொரோனாவிலிருந்து நாட்டைக் காப்பாற்றியது தேர்தல் ஆணையகமே ... மாறாக அரசியல்வாதிகளலல்லர்!

கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு சரியான நிலைப்பாட்டை எடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. தேர்தல் ஆணைக்குழுவின் அந்த முடிவை எடுக்காதிருந்திருந்தால் கொரோனா வைரசு இன்று ஒரு சமூகத் தொற்றுநோயாக மாறியிருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டீ. லால் காந்த குறிப்பிட்டார்.

கொரோனாவிலிருந்து நாட்டைக் காப்பாற்றியது தேர்தல் ஆணைக்குழுவன்றி, அரசியல்வாதிகள் அல்லர் என்றும் அவர் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், தேர்தல்களை நடத்த மட்டுமே அரசாங்கம் விரும்புகிறது எனவும் கண்டியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment