மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் தள்ளடி பிரதேசத்தில் அமைந்துள்ள கணபதி இந்து ஆலயம் நேற்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது என மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றுப் பின்னேரம் இனந்தெரியாதோர் கோவிலுனுள் புகுந்து அங்கிருந்த கணபதிச் சிலை மற்றும் கோவில் மண்டபத்தில் அமைந்திருந்த பொருட்கள் பலவற்றையும் சிதைத்துச் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இதே கணபதி ஆலயத்திலுள்ள சிலைகள் மற்றும் பொருட்கள் இனந்தெரியாதோர் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் ஊர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் தீவிர பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment