Wednesday, June 3, 2020

சஜித் அணிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க காலானார் ரணிலார்!

சமகி பலவேக வேட்பாளரான ஹரீன் பிரனாந்து மற்றும் வடிவேல் சுரேஷ் இருவருக்கும் எதிராக மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் இருந்து கடன் பெறுவதையும் காசோலைகளில் கையெழுத்திடுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வாகனங்கள் உட்பட தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அளிக்கப்பட்ட புகாரை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கத் தலைவரும் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி, தேர்தலில் போட்டியிடுவதாக வாதியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே, அத்தகைய பதவிகளை வகிக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பை வழங்குமாறு நீதிமன்றத்தால் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment